நாம் தேவனிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்?
Psalm 86 Bible Study Tamil, சங்கீதம் 86 விளக்கம், Tuticorin Church Blog, How to pray effectively Tamil

ஜெபம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல;
அது நம் படைப்பாளரோடு நாம் கொள்ளும் ஆழமானத் தொடர்பு. சங்கீதம் 86-ன் அடிப்படையில், நாம் தேவனிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்? என்பதை விவிலிய உதாரணங்களோடு கீழே காண்போம்.
உண்மையான விண்ணப்பத்திற்கான 12 வழிகள்:
1. தன்னை தாழ்த்த வேண்டும்
- Ex: Tax Collector (ஆயக்காரன்)
- “நான் பாவி” என்று தன்னைத் தாழ்த்திக்கொண்டான். தாழ்மையுள்ளவனே தேவ கிருபையைப் பெறுகிறான்.
2. பக்தியுள்ளவனாய் இருக்க வேண்டும்
- Ex: Zechariah (சகரியா)
- அவன் தனக்கு பிள்ளை இல்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் தேவனை உண்மையோடு சேவித்தான்.
3. தேவனை நம்ப வேண்டும்
- Ex: நூற்றுக்கு அதிபதி
- “ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வேலைக்காரன் பிழைப்பான்” என்றான். அசைக்க முடியாத விசுவாசமே ஜெபத்தின் பலம்.
4. நாடோறும் ஜெபிக்க வேண்டும்
- Ex: Daniel (தானியேல்)
- ஜெபிக்க கூடாது என்ற கட்டளை இருந்த போதும், வழக்கத்தின்படி ஒரு நாளில் 3 முறை முழங்கால் படியிட்டு ஜெபித்தான்.
5. அவரை உயர்த்தி போற்ற வேண்டும்
- Ex: David (தாவீது)
- சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், அவன் எப்போதும் தேவனைப் புகழ்ந்தான்.
6. தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும்
- Ex: People of Nineveh (நினிவே மக்கள்)
- தேவனுக்கு பயந்து, தங்கள் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினார்கள்.
7. ஒருமுகமான இருதயம்
- Ex: Apostles (அப்போஸ்தலர்)
- பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அனைவரும் ஒரே மனதோடு ஜெபத்தில் இருந்தார்கள்.
8. தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
- Ex: Jesus Christ (இயேசு)
- நமது முன்மாதிரியான இயேசு, அவருடைய வாழ்க்கை முழுவதும் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தினார்.
9. நன்றி செலுத்த வேண்டும்
- Ex: One leper who returned
- சுகமடைந்த 10 பேரில் ஒருவன் மட்டும் திரும்பி வந்து நன்றி சொன்னான். நன்றியுள்ள இதயம் தேவனுக்குப் பிரியம்.
10. என்ன நடக்கிறது என்று கூற வேண்டும்
- Ex: Hannah (அன்னாள்)
- மனிதர்களிடம் புலம்பாமல், தன் துக்கத்தை தேவனிடம் மட்டும் கொட்டித் தீர்த்தாள்.
11. மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும்
- Ex: Job (யோபு)
- யோபு தன் வேதனையையும் சந்தேகத்தையும் மறைக்காமல் தேவனிடம் வெளிப்படையாகச் சொன்னான்.
12. அடையாளம் கேட்டு வேண்டுதல்
- Ex: Gideon (கிதியோன்)
- தேவனுடைய சித்தத்தை அறிய அடையாளம் கேட்டு உறுதி பெற்றான். இதே மாதிரி, எசேக்கியா கூட அடையாளம் கேட்டான்.
முடிவுரை
சங்கீதம் 86 நமக்கு சொல்லுவது: ஜெபம் என்பது வெறும் Formal (சடங்கு) கிடையாது. அது ஒரு உண்மையான உறவு ❤️.
நாமும் இந்த மாதிரி இதயப்பூர்வமாக ஜெபித்தால், நம் தேவன் நிச்சயம் நம் விண்ணப்பத்தைக் கேட்பார்!
Christian lifestyle blog Tuticorin, தாவீதின் சங்கீதம் 86, Bible examples of prayer, SPC Tuticorin updates
shared by : Amy

Leave a comment